Pookal Pookum Tharunam Song Lyrics in Tamil from Madharasapattinam Movie. Pookal Pookum Tharunam Song Lyrics has written by Na. Muthukumar.

Pookal Pookum Tharunam Song Lyrics

படத்தின் பெயர்: மதராசப்பட்டினம்
வருடம்: 2015
பாடலின் பெயர்: பூக்கள் பூக்கும்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடகர்கள்: ரூப் குமார் ரதோட்,
GV பிரகாஷ் குமார்,
ஆண்ட்ரியா ஜெரேமியாக்,
ஹரிணி
Pookal Pookum Tharunam Lyrics in Tamil
ஆண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலைப் பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே
நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ…

ஆண்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

ஆண்: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே

பெண்: நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்: வேர் இன்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

பெண்: வாழ் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

ஆண்: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

பெண்: இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே

பெண்: Oh Where Would I Be
Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive,
It Makes Me Want To Fly Into The Sky!

பெண்: Oh Where Would I Be
If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be?
Oh Where, Oh Where?

ஆண்: எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே

பெண்: என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே

ஆண்: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம்
உறவானதேன்

பெண்: ஏனென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

ஆண்: பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே
பறவை வரைந்த பிறகும்

இருவரும்: இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ…

பெண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே
நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இருவரும்: என்ன புதுமை…

இருவரும்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ

video

Follow me on Blogarama

By Admin